search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fund help provide"

    விவசாயிகளுக்கு ரூ.8000 நிதி உதவி வழங்கப்படும் என்று பவன் கல்யாண் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். #PawanKalyan #LokSabhaElections2019

    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் 175 சட்ட சபை தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 11-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இங்கு தெலுங்கு தேசம்- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித் தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

    நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனை கட்சி, கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    நடிகர் பவன்கல்யாண் காஜீவாக்கா, பீமாவரம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார்.


    இந்த நிலையில் பவன் கல்யாண் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளும், இலவச திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

    அதன்படி பெண்களுக்கு சகோதரர்களின் சீதனம் போல் ஆண்டுக்கு 2 சேலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8000 நிதி உதவி வழங்கப்படும்.

    58 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ5000 சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்.

    முதுநிலை படிப்புவரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ரெயில் பாஸ் வழங்கப்படும். இளநிலை கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முதல் ஆண்டுக்கான தேர்வு கட்ட ணத்தை அரசே வழங்கும்.

    மேற்கண்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. #PawanKalyan #LokSabhaElections2019

    ×