என் மலர்

  நீங்கள் தேடியது "for stoning son-in-law"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மருமகன் மாமனார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாமனார் மருமகனை கல்லால் தாக்கினார்.
  • இது குறித்து மருமகன் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  பு.புளியம்பட்டி:

  ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி காந்திநகர் புதுகாலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (39).பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி அருணா. இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

  இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அண்ணாதுரை மனைவி வீட்டுக்கு வந்தார். தனது இளைய மகன் லிங்கேஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் மணியன் (55) மனைவியை வைத்து குடும்பம் நடத்த தெரியவில்லை. எதற்கு என் பேரனுடன் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.

  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அண்ணாதுரையை மணியன் கல்லால் தாக்கியுள்ளார். இது குறித்து அண்ணாதுரை புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணியனை கைது செய்தனர். பின்னர் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

  ×