search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For schools"

    • அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    • கன மழை பெய்வதால் மாவட்டம் முழுவதம் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக தலைவாசல், தம்மம்பட்டி பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகர், ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் , சங்ககரி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    வாகன ஓட்டிகள்அவதி

    இந்த மழையால் இரு சக்கர வாகனங்களில் அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டனர். மேலும் சிலர் குடை பிடித்த படியும், மழை கோர்ட் அணிந்த படியும் சாலைகளில் சென்றனர்.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளி, கல்லூரி விடுமுறை

    கன மழை பெய்வதால் மாவட்டம் முழுவதம் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 13மி.மி.பதிவாகியுள்ளது வீரகனூரில் 9, தம்மம்பட்டி 7, கெங்கவள்ளி 6, பெத்தநாயக்கன்பாளையம் 4.5, சேலம் 4 ஆத்தூர் 4, ஏற்காடு 2.6, கரிய கோவில் 1 மி.மீட்டர் என மாவட்டம் முழுவதும் 51.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    இதே போல நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மோகனூர், திருச்செங்கோடு உள்பட பகுதிகளில் கன மழை பெய்தது.இன்று காலையும் நாமக்கல் நகர பகுதி, குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி, கொல்லி மலை, ராசிபுரம் உள்பட பல பகுதகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதை அடுத்து மாணவர்கள் நலன் கருதி நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளார்.

    நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 32 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல்லில 2, பரமத்தி வேலூரில் 3, ராசிபுரம் 1.2, சேர்ந்தமங்கலம் 3.2, திருச்செங்கோடு 15, கலெக்டர் அலுவலகப் பகுதி, கொல்லிமலை 4 மல்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 61.4.மி. மீட்டர் மழை பெய்துள்ளது.

    கொல்லி மலையில் தடை

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருவதால் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவிகளில் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிக ள்செல்ல தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. 

    ×