என் மலர்
நீங்கள் தேடியது "flour packets"
- தேவகோட்டையில் பிளாஸ்டிக் பைகளில் இருந்த மாவு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- குடிசைத்தொழில் போல் நடைபெறுவதால் சாலை யோரங்களில் மாவு பாக்கெட்டுகளை விற்கின்றனர்.
தேவகோட்டை
சிவங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சில மாதங்களாக மாவு பாக்கெட்டு விற்பனை அதிகரித்து வருகிறது. குடிசைத்தொழில் போல் நடைபெறுவதால் சாலை யோரங்களில் மாவு பாக்கெட்டுகளை விற்கின்றனர்.
சமீப காலமாக இந்த மாவு தரமற்றதாக உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு உடல் உபாதையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல் முருகனுக்கு மாவுப்பொருட்கள் தரமற்ற முறையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரும், உதவியாளர் மாணிக்கமும் சாலையோரங்களில் விற்கப்படும் மாவு பாக்கெட்டுகளை திடீர் ஆய்வு செய்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் சுமார் 20 கிலோ மாவுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மாவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.






