என் மலர்

  நீங்கள் தேடியது "First Prime Minister"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாளான இன்று அவரின் சிறப்புக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். #JawaharlalNehru #ChildrensDay
  புதுடெல்லி:

  நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

  நேருவின் 129-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-  நமது முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம். சுதந்திர போராட்டம் மற்றும் பிரதமராக பதவி வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம்”. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

  குழந்தைகள் மீது பிரியம் கொண்ட நேரு, குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அவரது நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  #JawaharlalNehru #ChildrensDay
  ×