search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "first oneday match"

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. #ZIMvRSA
    ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

    டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் சேன் வில்லியம்ஸ் மட்டும் பொறுப்பாக அரை சதமடித்து 69 ரன்களில் அவுட்டானார். பிரெண்டன் டெய்லர் 40 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    தென் ஆப்பிரிக்கா சார்பில் டேல் ஸ்டெயின், ககிசோ ரபடா தலா 3 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், பெலுகுவாயோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 229 ரன்களை இலக்காகக் கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. ஹென்ரிக்ஸ் 66 ரன்களும்,  கிளாசன் 59 ரன்களும் எடுத்து வெளியேறினர். மார்கிராம் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. #ZIMvRSA
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது. #ZIMvRSA
    ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கிம்பர்லியில் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டீன் எல்கரும், மார்கிராமும் களமிறங்கினர்.

    ஆனால் ஜிம்பாப்வே அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இதனால் 7 விக்கெட்டுகளுக்குள் 101 ரன்களை எடுத்து தத்தளித்தது. அதன்பின்னர் இறங்கிய டேல் ஸ்டெயின் பொறுப்புடன் ஆடினார். அவர் அரைசதமடிக்க, 60 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 47.2 ஓவரில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    ஜிம்பாப்வே சார்பில் சதாரா 3 விக்கெட்டும், ஜார்விஸ், டிரிபானோ, மவுடா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்கள் ஜிம்பாப்வே வீரர்களை விரைவில் வெளியேற்றினர்.

    ஜிம்பாப்வே அணி 24 ஓவரில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் இம்ரான் தாஹிர் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டேல் ஸ்ட்ர்யின் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால், ஜிம்பாப்வே அணியை 120 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகனாக டேல் ஸ்டெயின் தேர்வு செய்யப்பட்டார். #ZIMvRSA
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ZIMvRSA
    ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இந்நிலையில், கிம்பர்லியில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது.

    ஆனால், தென் ஆப்பிரிக்காவின் துல்லிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி சிக்கி திணறியது. இதனால் ஜிம்பாப்வே அணி 34.1 ஓவரில் 117 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. அந்த அணியில் எல்டன் சிகும்பரா 27 ரன்களும், கேப்டன் மசகட்சா 25 ரன்களும் எடுத்தனர்.



    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், ரபடா, இம்ரான் தாஹிர் மற்றும் அந்திலே பெலுகுவாயா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர்களை சதாரா வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார்.

    ஆனாலும் சுதாரித்துக் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் 26.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகனாக லுங்கி நெகிடி தேர்வு செய்யப்பட்டார்.
    ×