search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2வது ஒருநாள் போட்டி - ஜிம்பாப்வேவை 120 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
    X

    2வது ஒருநாள் போட்டி - ஜிம்பாப்வேவை 120 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது. #ZIMvRSA
    ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கிம்பர்லியில் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டீன் எல்கரும், மார்கிராமும் களமிறங்கினர்.

    ஆனால் ஜிம்பாப்வே அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இதனால் 7 விக்கெட்டுகளுக்குள் 101 ரன்களை எடுத்து தத்தளித்தது. அதன்பின்னர் இறங்கிய டேல் ஸ்டெயின் பொறுப்புடன் ஆடினார். அவர் அரைசதமடிக்க, 60 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 47.2 ஓவரில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    ஜிம்பாப்வே சார்பில் சதாரா 3 விக்கெட்டும், ஜார்விஸ், டிரிபானோ, மவுடா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்கள் ஜிம்பாப்வே வீரர்களை விரைவில் வெளியேற்றினர்.

    ஜிம்பாப்வே அணி 24 ஓவரில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் இம்ரான் தாஹிர் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டேல் ஸ்ட்ர்யின் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால், ஜிம்பாப்வே அணியை 120 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகனாக டேல் ஸ்டெயின் தேர்வு செய்யப்பட்டார். #ZIMvRSA
    Next Story
    ×