என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fences"

    • 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
    • பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி (மேற்கு) செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் மேற்கு புறமாக உள்ள சுற்றுச்சுவர் எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாகன போக்குவரத்து மிகுந்த கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த சுற்றுச் சுவர் பகுதி அமைந்து இருப்பதால் பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×