என் மலர்
முகப்பு » Female trader killed by
நீங்கள் தேடியது "Female trader killed by"
- சுவிட் போர்டில் இருந்து எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார்.
- இது குறித்து கருங்கல்பாளைளயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், சையது காசீம் வீதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி தமிழ்செல்வி (38). இவர் அக்ரஹாரம் நஞ்சப்பா நகரில் இட்லி கடை வைத்து நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று கடையில் பாத்திரம் கழுவும் இடத்தை தமிழ்செல்வி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த சுவிட் போர்டில் இருந்து எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல்பாளைளயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
X