search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female leader"

    • இளையான்குடி பேரூராட்சி பெண் தலைவருக்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளார்.
    • இது குறித்து மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி தலைவராக தி.மு.க. வை சேர்ந்த ஜெமிமா உள்ளார்.

    கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. நகரச் செயலாளர் நஜூமுதீன் தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்தலில் தோல்வியடைந்தார்.

    இதனால் தி.மு.க. வைச் சேர்ந்த ஜெமிமா என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 13-வது வார்டில் நடந்த இடைதேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தி.மு.க. நகர்செயலாளர் நஜூமுதின் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் நஜூமுதின் மீண்டும் பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெமிமாவை தலைவர் பதவியிலிருந்து விலக ஒரு தரப்பினர் வற்புறுத்தி வருகின்றனர்.ஆனால் பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ஜெமிமா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் இளையான்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் ஜெமிமா, 13-வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஜூமுதீன் அ.தி.மு.க. உறுப்பினர் நாகூர் மீரா ஆகிய 3 பேர் மட்டும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். 15 வார்டு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர். கூட்டம் நடத்த போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தலைவர் ஜெமிமா நிருபர்களிடம் கூறிய தாவது:-

    இளையான்குடி பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி எனக்கும், எனது கணவருக்கும் நஜூமுதீன் தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது குறித்து மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் விவகாரத்தில் மாவட்ட செயலாளர், என்ன சொல்கிறாரோ? அதை கேட்பதற்கு தயாராக உள்ளோம். இதற்கிடையில் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இது தொடர்பாக தி.மு.க. நகர்செயலாளர் நஜிமுதின் கூறும்போது, இந்த குற்றச்சாட்டு பொய்யான தாகும். நான்யாரையும் மிரட்டவும் இல்லை. இதுபற்றி மாவட்ட செயலாளரிடம் தெரிவித்து உள்ளேன்.

    தற்போது தமிழக முதல்வர் உள்ளாச்சி பிரதிநிதிகள் மாநாட்டில் நேரில் பாராட்டு தெரிவித்த இளையான்குடி பெண் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் இளையான்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×