search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Advisory"

    • சத்திரக்குடி வட்டாரத்தில் விவசாயிகளுக்கான ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.
    • நெல் நுண்ணூட்டச் சத்து இடுவதன் அவசியம் பற்றி விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் சிங் சல்பேட் உரம் வழங்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில், வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது.

    இதில் சத்திரக்குடி வட்டாரத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் பேசுகையில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் நெல் திட்டத்தில் நுண்ணூட்டம் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் மற்றும் நெல் நுண்ணூட்டச் சத்து இடுவதன் அவசியம் அனைத்து கிராம திட்டத்தில் தேர்வான அ. புத்தூர், போகலூர், எட்டிவயல், மற்றும் மென்னந்தி, நாகாச்சி விவசாயிகளுக்கு நெல் பயிரில் அடியுரமாக இடுவதற்கு 50 சதவீதம் மானியத்தில் சிங் சல்பேட் உரம் வழங்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறினார்.

    தோட்டக்கலை உதவி இயக்குநர் நிரேஷ் குமார் பேசுகையில், குழித்தட்டு, மிளகாய் நாற்றங்கால், நுண்ணீர் பாசனம் அமைத்தல் போன்ற திட்டங்களை எடுத்துரைத்தார்.

    கால்நடை உதவி மருத்துவர் தமிழ்ச்செல்வி பேசுகையில், மாட்டு தீவன பயிர்கள் மற்றும் கால்நடை தீவனங்களான சுபாபுல், அகத்தி, சாகுபடி பற்றி எடுத்துக் கூறினார். கால்நடைகளுக்கு அரிசி மாவு சாதம் உணவாக கொடுப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் கூறினார்.

    வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர் அருண்ராஜ், நெல் பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றி கூறினார்.

    பாண்டிக்கண்மாய் முன்னோடி விவசாயி ஜீவானந்தம், கீழக்கோட்டை முன்னோடி விவசாயி இளங்கோவன், துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல், அட்மா திட்ட மேலாளர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×