என் மலர்

    நீங்கள் தேடியது "farmer home"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    துறையூர் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    புலிவலம்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. விவசாயி. இவர் வேலை காரணமாக துறையூருக்கு சென்றுள்ளார். இவரது மனைவி ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். 

    இந்நிலையில் வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பீரோவின் பூட்டை உடைத்து அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.43 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். 

    துறையூருக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய சின்னதம்பி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.43 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து புலிவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.3 1/2 லட்சமாகும்.
    ×