search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "extra bus"

    • மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
    • நாளை முதல் இடைநிறுத்தமில்லா பாய்ண்ட் டூ பாய்ண்ட் பேருந்துகள் இயக்கம்.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் 30.12.2023 முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இப்பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு, கூடுதலாக மாநகரப் போக்குவரத்துக் கழகமானது தடம் எண். எம்18-ல் 6 பேருந்துகளை இடைநிறுத்தமில்லா பேருந்துகளாக (பாய்ண்ட் டூ பாய்ண்ட்) 10 நிமிட இடைவெளியில் 25.01.2024 அன்று முதல் அதிகாலை 03 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இயக்க உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பனியன் நிறுவனங்களின் பணியாற்றுவதற்காக தினமும் வந்து செல்கின்றனர்
    • சரியான பஸ் வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.

    திருப்பூர் : 

    உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களின் பணியாற்றுவதற்காக தினமும் வந்து செல்கின்றனர்.அவ்வாறு வேலைக்கு சென்று வரும் பொதுமக்களுக்கு நேரங்களில் சரியான பஸ் வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.உடுமலை கிளை போக்குவரத்து கழகத்தின் சார்பில், கிராம மற்றும் தொலைதுார வழித்தடங்களில் நுாற்றுக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், கோவை செல்வதற்கு, பழநி மற்றும் உடுமலையிலிருந்து நள்ளிரவு மற்றும் அதிகாலையிலும், பஸ்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தேவையான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது.ஆனால் உடுமலை - திருப்பூர் இடையிலான பஸ் போக்குவரத்து இரவு, 10:25 மணி வரை மட்டுமே இருப்பதால்ஸபயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.உடுமலை - திருப்பூர் செல்லும் வழிதடத்தில், பல்லடம் மற்றும் குடிமங்கலம், கோட்டமங்கலம் உட்பட பல்வேறு கிராமப்புற மக்களுக்கும், இத்தொலைதுார பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.இக்கிராமங்களிலிருந்து உடுமலைக்கு தொழில் ரீதியாக வரும் மக்கள், இரவு நேரத்தில், கிராமப்புற பஸ்களும் இன்றி, திருப்பூர் செல்லும் பஸ்களும் இல்லாததால் வேறுவழியின்றி, பஸ் ஸ்டாண்டில் தங்கும் நிலை ஏற்படுகிறது.

    உடுமலையிருந்து திருப்பூருக்கு இரவு 10:20 மணிக்கும், திருப்பூரிலிருந்து உடுமலைக்கு இரவு 10:25 மணிக்கு இறுதி பஸ்சும் இயக்கப்படுகிறது.இந்த பஸ்சை தவறவிடும் பயணிகள், திருப்பூரிலிருந்து வால்பாறைக்கு 11மணி பஸ்சில் பொள்ளாச்சி சென்று பின் அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்சில் உடுமலை வந்தடைகின்றனர். இத்தகைய சிரமத்தை தவிர்க்கவும், கிராமப்புற மக்கள் மற்றும் திருப்பூர் செல்லும் பயணிகள் பயன்பெறும் வகையில் இரவில் திருப்பூருக்கு பஸ் இயக்கப்படும் நேரத்தை கூடுதலாக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×