search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "expensive in the market"

    • முகூர்த்தம் காரணமாக காய்கறிகள் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது.
    • மார்க்கெட்டில் பழங்கள் விலை சற்று உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ .உ.சி . காய்கறி மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், ஊட்டி , தாளவாடி, ஆந்திரா, எடப்பாடி, மேட்டுப்பா ளையம், பெங்களூர், தாரா புரம் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது.

    இங்கு வழக்கமாக 75 முதல் 90 டன் வரை காய்கறிகள் வரத்தாகி வரும். ஆனால் பரவலாக மழை பெய்தது காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துவிட்டது.

    இதனால் இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டிற்கு வெறும் 50 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்து இருந்தது.

    அதே சமயம் தொடர் முகூர்த்தம் காரணமாக காய்கறிகள் தேவை அதிகரித்து இதன் எதிரொலியாக விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட ஒரு சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

    இன்று வ. உ.சி. மார்க்கெட்டில் விற்க ப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    கத்திரிக்காய் - 80 - 90, பீர்க்கங்காய்-60, புடல ங்காய்-50, தக்காளி - 35 - 40, பெரிய வெங்காயம் - 30, சின்ன வெங்காயம் - 80, பீன்ஸ்-80, கேரட் - 65, பாவக்காய் - 60,

    முட்டைக்கோஸ் - 20, காலிபிளவர் - 30, குடமிளகாய் -60, முருங்கை க்காய் - 80, பீட்ரூட் - 55, வெண்டைக்காய் - 70, முள்ளங்கி - 40, சுரைக்காய் - 15, சவ்சவ் - 20, பட்ட அவரை - 80, கருப்பு அவரை - 100. இஞ்சி வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் விலை கிடுகிடு என உயர்ந்து இன்று ஒரு கிலோ ரூ. 200-க்கு விற்கப்படுகிறது.

    ஈரோடு மார்க்கெட்டிற்கு பெங்களூர், மகாராஷ்ட்ரா, ஊட்டி கொடைக்கானல், ஆந்திரா, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்து பழங்கள் வரத்தாகி வருகிறது.

    இங்கு நாளொன்றுக்கு 30 டன் வரை பழங்கள் வரத்தாகி வந்தன. தற்போது வரத்து குறைவால் இன்று 10 டன் பழங்கள் மட்டுமே வரத்தாகி இருந்தன.

    இதேப்போல் தொடர் முகூர்த்தம் காரணமாகவும், வரத்து குறைவு காரணமா கவும் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் பழங்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்று விற்கப்பட்ட பழங்களின் விலை கிலோவில் வருமாறு:-

    கொய்யா-50, செந்தூரம் மாம்பழம் - 50, ஜில் பசந்த் மாம்பழம் - 70, ருமேனியா மாம்பழம் -70, கோப்பூர் அல்வா மாம்பழம்-60, இமாம் பசந்த் மாம்பழம் - 50, மாதுளை பழம் - 120, ஆப்பிள் - 200, ஆஸ்திரேலியா ஆரஞ்சு - 120, சாத்துக்குடி-80, பன்னீர் திராட்சை - 120, சின்ன நாவல் பழம் - 240, பெரிய நாவல் பழம் - 360. 

    ×