search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex.MLA Ravi Arunan"

    • கூடுதலாக எடுத்து செல்லப்படும் 15 டன் வரையிலான கனிம வளங்களை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் சாலையில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
    • பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வாகனத்தை மீண்டும் சாலையில் பயணிக்க அனுப்புவது சட்டத்தை மீறிய செயலாகும்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள கீழக்கடையத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாசிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அபராதம் விதிப்பு

    கேரளா மாநிலத்திற்கு நாள்தோறும் ஏராளமான கனரக லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இவை 25 டன் எடை வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 40 முதல் 45 டன் வரை எடுத்து செல்கிறார்கள்.

    வாகன சோதனையி ன்போது ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ.20 ஆயிரம் அபராதமும், கூடுதலாக ஏற்றி செல்லும் ஒவ்வொரு டன்னிற்கும் ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.45 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

    நடவடிக்கை தேவை

    இது வரவேற்கத்தக்கது என்றாலும், புதிய மோட்டார் வாகன விதிகளின்படி தற்போது அபராதம் விதிக்காமல் இருப்பது அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. அதாவது அபராதம் ரூ.45 ஆயிரம் வரை விதித்தாலும், கூடுதலாக எடுத்து செல்லப்படும் 15 டன் வரையிலான கனிம வளங்களை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் சாலையில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

    ஆனால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வாகனத்தை மீண்டும் சாலையில் பயணிக்க அனுப்புவது சட்டத்தை மீறிய செயலாகும். எனவே பாஸ் இல்லாமல் அதிகப்படியான கனிமங்களை அனுப்பும் குவாரி உரிமையாளர்கள் மீது எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×