என் மலர்
நீங்கள் தேடியது "Excited by a"
- டிரோன் கேமிரா ஒன்று தோட்டத்து பகுதிகளுக்கு மேல் வானத்தில் பறந்து கொண்டிருந்தது.
- இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு:
தாளவாடி அருகே உள்ள சூசைபுரம், பீம்ராஜ்நகர் கிராமங்களில் மதியம் 12 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது டிரோன் கேமிரா ஒன்று தோட்டத்து பகுதிகளுக்கு மேல் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே விவசாயிகள் அந்த டிரோன் கேமிரா வந்த திசையை நோக்கி சென்று பார்த்தனர்.
அப்போது அந்த கேமிரா கர்நாடக மாநிலம் பிசில்வாடி பகுதியில் இருந்து வந்தது தெரியவந்தது. மாலை 4 மணி வரை டிரோன் கேமிரா அங்குள்ள தோட்டத்து பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்தது.
அதன் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. ஆனால் யார் அந்த டிரோன் கேமிராவை பறக்க விட்டது என்று தெரியவில்லை.
இது குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






