search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "estimate"

    • கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.

    புதுச்சேரி்:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் புதியதாக உயர்தர மின் கேபிள் அமைத்து மின்சாரத் தட்டுப்பாடுகளை போக்கிட ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.

    இதற்கான பூமி பூஜையை உப்பளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர் முத்தானந்தம் , இளநிலை பொறியாளர் சுரேஷ் , ஒப்பந்ததாரர் சுகுமாரன் , தி.மு.க நிர்வாகிகள் ரவி, தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், நிசார், காங்கிரஸ் சொக்கலிங்கம், தி.மு.க நிர்வாகிகள் நோயல், ராஜி, விநாயகமூர்த்தி, சந்துரு, அஜித்ராஜீ, காளியம்மாள், கோமுகி, விடுதலை சிறுத்தை கட்சி கற்பகம், மாயவன், வீரப்பன், அசோக், அன்வர், ரவிகுமார், காளப்பன், ராகேஷ், சுகுமார், சங்கரநாராயணன், மணி, மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில், முதல் கட்டமாக 89 கிராம ஊராட்சிகளில் ரூ.32.42 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • சமுதாயப்பணிகள் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், பிரவலூர் ஊராட்சியை அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் தன்னிறைவு அடையச் செய்வது குறித்தும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் சமுதாயப்பணிகள் தொடா்பாகவும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

    முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கிராமப்புற வளா்ச்சியில் தனிகவனம் செலுத்தி அனைத்து கிராமப்புற பகுதிகளையும், நகா்ப்புறப்பகுதிகளுக்கு இணையாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் பிற துறைகளை ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முதல் கட்டமாக மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் மொத்தம் 89 கிராம ஊராட்சிகளில் நீர்நிலை புனரமைத்தல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 118 பணிகள் ரூ.958.44 லட்சம் மதிப்பீட்டிலும், குக்கிராமங்களில் தெருக்கள், வீடுகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 192 பணிகள் ரூ.752.93 லட்சம் மதிப்பீட்டிலும், சமத்துவ சுடுகாடு, இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 21 பணிகள் ரூ.80.86 லட்சம் மதிப்பீட்டிலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுப்பயன்பாட்டு கட்டமைப்புக்களை உருவாக்குதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 105 பணிகள் ரூ.749.21 லட்சம் மதிப்பீட்டிலும், உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.3242.22 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் தொடக்கமாக பிரவலூர் ஊராட்சியில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் சமுதாயப்பணிகள் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் பிரவலூர் ஊராட்சியைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் இந்த பகுதியில் கிடைக்கப்பெறும் கால்நடைச்சாணம், தென்னை, வாழை ஆகியக்கழிவுகளைக் கொண்டு எரிவாயு கலன் அமைப்பது குறித்தும், சுகாதார நாப்கின், பனைஓலைக்கூடை முடைதல், தையற்கூடம் போன்ற வைகள் தொடா்பாக பயிற்சி பெறுவது குறித்தும் மற்றும் பொதுமக்கள் எடுத்துரைத்துள்ளனர்.

    இதனை கருத்தில் கொண்டு பிரவலூர் ஊராட்சியை தன்னிறைவு அடைய செய்வதற்கான முன் மாதிரியான ஊராட்சியாக உருவெடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமார், உதவி திட்ட அலுவலா்கள் விசாலாட்சி (வீடு, சுகாதாரம்), செல்வி (உட்கட்டமைப்பு), சிவகங்கை வட்டாட்சியா் தங்கமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெகநாதன், ரத்தினவேல், பிரவலூர் ஊராட்சி மன்றத்தலைவா் கவிதா மற்றும் பலா் கலந்து கொண்டனா். 

    ×