என் மலர்
நீங்கள் தேடியது "EPS supporters protest"
- போடியில் இன்று ஊர்வலமாக சென்ற இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ். தரப்பினர் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பெரியகுளத்தில் உள்ள அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் கட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ெதாகுதியாகும். இங்கு அ.தி.மு.க. வின் ஒற்றை தலைமை பிரச்சனை தொடங்கியதிலிருந்து ஓ.பி.எஸ்.இன் ஆதரவாளர்கள் இ.பி.எஸ்.க்கு எதிராக ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என செய்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பொதுக்குழு ஒன்று கூடி இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது. இதனையடுத்து தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். போடி திருவள்ளுவர் சிலை முன்பாக பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
நம்ம தலைவர் எடப்பாடியார் என்ற வாசகம் பொருந்திய பதாகைகளை கையில் ஏந்தியவாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் சேதுராமன், எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒன்று கூட தொடங்கியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் ஊர்வலமாக வந்தவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனையடுத்து உடனடியாக போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அகற்றினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளத்தில் உள்ள அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் கட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.






