search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ENGBEL"

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது பெல்ஜியம் #WorldCup2018 #BELENG #ENGBEL
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று 3-வது இடத்திற்காக பலப்பரீட்சை நடத்தின.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இங்கிலாந்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பெல்ஜியம் அணியின் தாமஸ் மியுனியர் 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார். இடது பக்கம் கார்னருக்கு சற்று முன்பகுதியில் இருந்து கொடுத்த பாஸை சிறப்பான முறையில் மியுனியர் கோலாக்கினார். இவர் அரையிறுதியில் சஸ்பெண்ட் காரணமாக இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

    அதன்பின் இரு அணி வீரர்களும் 45 நிமிங்கள் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலைப் பெற்றது.

    இடைவேளை முடிந்து 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்தை கோல் அடிக்க விடாமல் பெல்ஜியம் டிபென்டர்ஸ்கள் பார்த்துக் கொண்ட போதிலும் ஹசார்டு, ப்ரூயின் ஆகியோர் கோல் அடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.



    82-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றி ப்ரூயின் பந்தை கடத்தில் ஹசார்டிடம் கொடுத்தார். ஹசார்டு இரண்டு இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றி கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரமாக 3 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இதில் கோல் விழாததால் பெல்ஜியம் 2-0 என வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல்பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #BELENG #ENGBEL
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று 3-வது இடத்திற்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இங்கிலாந்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    பெல்ஜியம் அணியின் தாமஸ் மியுனியர் 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார். இவர் அரையிறுதியில் சஸ்பெண்ட் காரணமாக இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.



    அதன்பின் இரு அணி வீரர்களும் 45 நிமிடங்கள் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    நான்கு கோல்கள் அடித்துள்ள ரொமேலு லுகாகு இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவது சந்தேகம்தான். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் இன்றிரவு 11.30 மணிக்கு மோதுகின்றன.

    இரண்டு அணிகளும் முதலிடம் பிடிப்பது யார் என்பதற்காக மோதுகின்றன. வெற்றித் தோல்வியால் எந்த பாதிப்பும் இருக்காது. பெல்ஜியம் கடந்த சனிக்கிழமை துனிசியாவை எதிர்கொண்டது. இதில் பெல்ஜியம் 5-2 என வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது பெல்ஜியத்தின் முன்னணி வீரரான ரொமேலு லுகாகுவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.



    இதனால் இந்த வாரத்தில் லுகாகு பயிற்சி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று நடைபெறும் முக்கியத்துவம் இல்லாத போட்டியில் லுகாகு பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
    ×