என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election campaign rally"

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். #sevendead #suicideattack #Afghanelectionrally
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட  ஜலாலாபாத் நகரின் அருகே அப்துல் நாசிர் முஹம்மது என்ற வேட்பாளர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயம் அடைந்தனர். #SevenDead #SuicideAttack #AfghanElectionRally
    ×