search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "education certificate"

    • நீட் தேர்வுக்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடந்தது.
    • என்.எல்.சி.நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் சத்திய பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கடலூர்:

    நெய்வேலி புதுநகர் 11-வது வட்டம் என்.எல்.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி.நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் சத்திய பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். என்.எல்.சி. கல்வித்துறையின் பொது மேலாளரும் கல்வி செயலாளருமான நாகராஜன் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். என்.எல்.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை செந்தாமரை வரவேற்றார். நிகழ்ச்சியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் தொட ங்கப்பட்டன.நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பயிற்சி கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் மாணவர்களின் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #Ragging #Anbalagan
    சென்னை:

    சென்னையில் ராகிங் தடுப்புக்குழு ஆய்வுக்கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும்.

    ராகிங்கை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகிங் கண்காணிப்புக் குழு இல்லாத கல்லூரிகளில் குழு அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். #Ragging #Anbalagan
    ×