search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drunkers Opposition"

    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து குடிமகன்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூர் - எரியோடு சாலையில் கரட்டுப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்கும். எனவே இந்த கடையை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    மேலும் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இதையறிந்த அப்பகுதி குடிமகன்கள் விரக்தியடைந்தனர். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் திண்டுக்கல் மற்றும் காணப்பாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது குடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த கடையை மூடக் கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், மது ஒழிப்பு என்பது வெறும் கண்துடைப்பே. நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோதும் சிக்கன் மற்றும் பெட்டிக்கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை கொள்முதல் செய்து ரூ.200 வரை விற்பனை செய்து வந்தனர்.

    அப்போதும் குடிமகன்கள் இதே பகுதியில்தான் சுற்றித் திரிந்தனர். அதற்கெல்லாம் கேள்வி கேட்காமல் அரசு சார்பில் திறக்கப்படும் டாஸ்மாக் கடையை மற்றும் எதிர்க்கின்றனர். கடுமையான உடல் உழைப்பால் அசதி ஏற்படுவதால் மது அருந்துகிறோம். யாரையும் தொந்தரவு செய்யமாட்டோம். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×