search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug selling"

    • திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்த மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் வாங்கியதாக தெரிவித்தார்.
    • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை பகுதிகளில் மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கார்க்கிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதில் சென்னை கிழக்குகடற்கரை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டபோது பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்த மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் வாங்கியதாக தெரிவித்தார்.

    மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தம் பெட்டமைனை பதுக்கி வைத்து வாட்ஸ் அப் குழு மூலம் ராகுல் என்பவர் விற்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ராகுலையும் போலீசார் கைது செய்தனர். அவர் அரசியல் பிரமுகர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.

    அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தி விற்பனையில் தொடர்புடையவர்கள் குறித்து கைதான ராகுலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் போதை மருந்துகளை பஸ்சில் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைஊசி சப்ளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் போதை மருந்துகளை பஸ்சில் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் உத்தமபாளையத்தை சேர்ந்த முகமதுமீரான்(22), மாணிக்கம்(19) ஆகியோரை போதை மருந்துடன் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் டாக்டர் பரிந்துரையின் பேரில் மட்டும் கிடைக்கும் மயக்க மருந்தை தவறான வழியில் போதைஊசியாக அதிக லாபத்திற்கு வாலிபர்கள், பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் சின்னமனூரை சேர்ந்த தங்கேஸ்வரன்(20), காமாட்சிபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் திருச்சியை சேர்ந்த ஜோனத்தன்மார்க்(30) என்பவரிடம் மருந்துகளை பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.

    ஜோனத்தன்மார்க்குக்கு உதவியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வினோதினி செயல்பட்டதும் தெரியவந்தது. அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து போதை மருந்து, ஊசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளனர்.

    திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஸ்குமார் மீனா மேற்பார்வையில் டி.எஸ்.பிக்கள் பாபுபிரசாத், சுரேஷ், தேனி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைஊசி சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ×