search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "doctors testing"

    கேரளா சென்று திரும்பிய திருச்சி பெண்ணுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று தெரிந்து கொள்வதற்காக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவரின் ரத்தத்தை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தில்லைநகர் 10-வது குறுக்கு தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்களின் மகன் கார்த்திக். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார்.

    அடிக்கடி கேரள மாநிலம் கல்கேட் செல்வது வழக்கம். சமீபத்தில் தாயார் ராஜேஸ்வரியை அழைத்து கொண்டு கார்த்திக் கேரளா சென்றார். அங்கு ராஜேஸ்வரிக்கு சளி, இருமல் ஏற்பட்டு காய்ச்சல் வந்தது. அதற்காக மகன் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் குணமாகவில்லை. பின்னர் ராஜேஸ்வரி திருச்சிக்கு வந்தார்.

    காய்ச்சல் குணமாகாததால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். கேரளா சென்று வந்தவருக்கு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் வந்திருக்கலாமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அனிதா தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் ராஜேஸ்வரியின் ரத்தம், சளி ஆகியவற்றை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    ×