search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disease risk from potato"

    • வண்டியில் எடுத்து செல்லும் போது கீழே விழுகின்றன.
    • உரிமையாளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் நெல்லித்துறை ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த மண்டிகளுக்கு கர்நாடகம், குஜராத், கோலார், நீலகிரி, கர்நாடக மாநிலம் ஹாசன் ஆகிய பகுதியில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் உருளைக்கிழங்கு வருகிறது. இந்தக் கிழங்குகளை தரம் பிரித்து மொத்தமாகவும் சில்லரையாகவும் தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தரம் பிரிக்கும் போது ஏற்படுகின்ற கழிவுகளை மண்டிகளில் கொட்டி வைத்து அதனை தினமும் ஊட்டி சாலையில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள நேஷனல் பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் கொட்டி வருகின்றனர். அப்படி எடுத்துச் செல்லு ம்போது கழிவுகள் செல்லும் வழிகளில் எல்லாம் கொட்டுகின்றன. இதனால் கழிவுகளில் ஈ மொய்ப்பதுடன், துர்நாற்றமும் வீசி வருகிறது.

    இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

    இதுகுறித்து கிழங்கு மண்டி உரிமையா ளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகமும், மேட்டுப்பாளையம் தாசில்தார், நகராட்சி, மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×