என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Disadvantages"
- சித்த மருத்துவ மருந்துகளில் வால் மிளகு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.
- வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
வால் மிளகு என்பது இருவித்திலை தாவரம் ஆகும். மிளகின் அடிப்பகுதியில் வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால் மிளகு என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வால் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நம் உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதிகமாக பயன்படுத்தும்போது பல தீமைகளையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எனவே, வால் மிளகின் தீமைகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் அதன் தீமைகள் பற்றி விவரித்துள்ளோம்.
வால்மிளகு என்றால் என்ன.?
வால்மிளகு என்பது மரத்தில் படர்ந்து வளரும் பலபருவக் கொடித் தாவரம் ஆகும். இதனை ஜாவா, தாய்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவு போன்ற பகுதிகளில் பயிர் செய்கின்றனர். இது காரமும், சற்று கசப்பு சுவை கொண்டதாகவும் இருக்கிறது.
மூலக் கடுப்பு, வயிற்றுக் கடுப்பு முதலான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சித்த மருத்துவ மருந்துகளில் வால் மிளகு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.
வால் மிளகு அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:
• வால் மிளகு காரத்துடன் கூடிய வலுவான சுவையுடையது. எனவே, இதனை அதிக அளவில் உட்கொள்ள கூடாது. அப்படி அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
• வால் மிளகு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. வயிற்று புண் மற்றும் வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் வால் மிளகை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது மேலும், வயிற்று எரிச்சலை அதிகப்படுத்தும்.
• வால் மிளகு ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யக்கூடியது. இதனால், பல ஆண்கள் வால் மிளகை அதிக அளவிலும் அடிக்கடியும் உட்கொண்டு வருவார்கள். ஆனால், வால் மிளகை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. அப்படி அதிகமாக எடுத்து கொண்டால் ஆண்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
• வயதானவர்கள், வால் மிளகினை அதிகமாக எடுத்துக்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
எனவே, வால் மிளகினை குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி பயன்படுத்தினால் மேற்கூரிய பக்கவிளைவுகள் ஏற்படும்.
- பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முகமதுபாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், பண்டாரவாடை கிரசெண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கோமதி வரவேற்று பேசினார்.
பள்ளி நிர்வாகக்குழு தலைவர் முகமது ஜபுருல்லா தலைமை வகித்தார்.
தாளாளர் முகமதுபாட்சா, முன்னாள் உறுப்பினர் அப்துல்ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
பள்ளி தமிழாசிரியை கலையரசி உறுதிமொழி வாசித்தார்.
பள்ளியின் நிர்வாக அலுவலர் சி.கரிகாலன், துவக்கவுரை நிகழ்த்தினார்.
இதில் பாபநாசம் காவல் கண்காணிப்பாளர் பூரணி, மனநல மருத்துவர் இக்பால் சரிப் ஆகியோர் கலந்து கொண்டு மது போதை பொருட்களினால் உண்டாகும் பாதிப்புகள், தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்த கருத்தரங்கில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முகமதுபாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஆசிரியர் கென்னடி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
- பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 2 கி.மீ. தூரம் சங்கிலி போல் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து அணிவகுத்து நின்றனர்.
- போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 2 கி.மீ. தூரம் சங்கிலி போல் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து அணிவகுத்து நின்றனர். அவர்களுடன் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் கைகளை கோர்த்து நின்றார். மேலும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதேபோல் மாணவர்க ளும் போதைப் பொரு ளுக்கு எதிரான வாசக ங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தியவாறுநின்று விழிப்புணர்வு ஏற்படு த்தினர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்