search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul parliamentary constituency"

    தற்போது நடந்து முடிந்த தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 75 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். அதாவது 11,55,438 பேர் வாக்களித்து உள்ளனர். 3,85,057 பேர் வாக்களிக்கவில்லை.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 15,40, 495 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது 11,55,438 பேர் வாக்களித்து உள்ளனர். 3,85,057 பேர் வாக்களிக்கவில்லை. பழனி சட்டமன்ற தொகுதியை தவிர மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்து உள்ளனர்.

    திண்டுக்கல் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 3-ம் பாலினத்தவர் 158 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்களில் 17 பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டும் அதிகபட்டசமாக 79.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 75.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 77.36 சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். இது கடந்த தேர்தலை விட குறைவான வாக்கு சதவீதம் ஆகும்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக தி.மு.க.வுடன் பா.ம.க. நேரடி போட்டியை சந்திக்கிறது. #DMK #PMK
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் அனைவரும் வேட்பாளர்களை கிட்டத்தட்ட தேர்வு செய்து அறிவித்து விட்டனர். ஒரு சில கட்சிகள் மட்டுமே இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. மனுதாக்கலுக்கு பிறகு தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்க தொடங்கும்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இதுவரை அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா. ஆகிய 4 கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்று வந்துள்ளன. அதிலும் அ.தி.மு.க.விற்கு முகவரி தந்த தொகுதி என்பதால் பெரும்பாலும் இந்த தொகுதியை கூட்டணி கட்சியினருக்கு அ.தி.மு.க. விட்டு தராது.

    ஆனால் இந்த முறை தொகுதிகள் பிரிப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டதால் திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது. இதன் முலம் தென் மாவட்டங்களில் முதல் முறையாக தனது செல்வாக்கை நிலை நிறுத்தும் முயற்சியில் பா.ம.க. இறங்கியுள்ளது.

    தி.மு.க. வேட்பாளராக வேலுச்சாமியும், பா.ம.க. வேட்பாளராக ஜோதி முத்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஒட்டன் சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் பெரும்பாலான பொதுமக்களுக்கு இவர்கள் குறித்த முழு விபரம் தெரியாது. இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் முன்னிலையில் இவர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்று வந்த பா.ம.க. முதல் முறையாக தென் மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ள திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆதரவோடு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் ஈடுபடும். இதனால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் கடுமையான சவாலை சந்திக்க இரு கட்சியினரும் தீவிரமான பிரசாரத்தை மேற்கொள்வார்கள். #DMK #PMK
    ×