என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Development Officer"

    • ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் மீது வழக்குப்பதியப்பட்டது.
    • கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜகோபாலன், செயலாளர் கோபாலன், நரிக்குடி ஊரக வளர்ச்சித் துறை உதவி என்ஜினீயர் பெரோஸ்கான் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 80 பெண்கள் உள்பட 230 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×