search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Department of Artificial Intelligence"

    • செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் .
    • 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட வர்களும், 70-க்கும் மேற் பட்ட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஆலம்பட் டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் கணினி துறை சார் பில் 'அலெக்சா 2கே23' என்ற கம்ப்யூட்டர் கருத்தரங்கம் கல்லூரி சேர்மன் எம்.எஸ். ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோர் வழிகாட்டுதல்படி நடை–பெற்றது.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் கார்த்திகா வர வேற்றார். கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற் றிய கல்லூரி முதல்வர் டாக்டர். அப்துல் காதிர், கம்ப்யூட்டரை தவிர்த்து மனிதன் வாழ இயலாத சூழல் உருவாகியுள்ளது. கம்ப்யூட்டர் துறையில் அடுத்த கட்ட முன்னேற்றமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துள் ளது.

    இதன் மூலம் பல்வேறு வேலைகளை மிகவும் துல்லி யமாகவும், துரிதமாக வும் செயலாற்ற இயலும் என்ப தால் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத் துறையில் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண் டும் என்றார். பின்னர் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அனைத்துக் கல்லூரி மாண வர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை வாசித்தும், தாங்கள் தயாரித்துக் கொண்டு வந்த போஸ்டர் மற்றும் கம்ப்யூட்டர் மாடல்க ளையும் காட்சிப்படுத்தினர். கருத்த ரங்கில் நடத்தப்பட்ட பேஸ் பெயிண்டிங், டெக்னோ குவிஸ், பேஷன் பேரேடு, ஆஸ் யூ லைக் இட் போன்ற போட்டிகளில் மாணவ, மாண வியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பின்னர் நடந்த அமர்வில் விஜய் டி.வி. புகழ் அருண் மற்றும் அரவிந்த் கலந்து கொண்டு மாணவர்களுக் கான விழிப்புணர்வு உரை யாற்றினர். இக்கருத்தரங்கில் மதுரையைச் சேர்ந்த பல் வேறு கல்லூரிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள் ளிட்ட 450-க்கும் மேற்பட்ட வர்களும், 70-க்கும் மேற் பட்ட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பா டுகளை கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா தலை மையில் பேராசிரியர்கள் ராமநாதன், சசிகலா, நந்தினி, கவிதா, மேகலா, ஆர்த்தி, சகாய ஆக்ஸிலின் பிரவீனா ஆகியோர் தலை மையில் மாணவர்கள் செய் தனர். கூட்ட அரங்கம் மற் றும் உணவு ஏற்பாடுகளை கல்லூரியின் மனித வள மானேஜர் முகமது பாசில் செய்தார். முடிவில் பேராசி ரியர் ராமநாதன் நன்றி கூறினார்.

    ×