search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dengue affect"

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். #Swineflu #Dengue

    திருவள்ளூர்:

    தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

    கடந்த வாரம் மாதவரம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியானார்கள். இதே போல் திருவள்ளூரில் ஒரு சிறுவனும், அதிகத்தூரில் ஒரு சிறுமியும் அடுத்தடுத்து இறந்தனர்.

    தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கிராம பகுதிகளில் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 103 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். போலீஸ்காரர் உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதே போல் 8 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் திருப்பாச்சூர், மணவாளநகர், மேல்நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பூந்தமல்லி ஏழுமலை இன்று வந்தார்.

    அப்போது, அவருடன் அ.ம.மு.க. நிர்வாகிளும் வந்திருந்தனர். அவர்கள், தயாரித்து கொண்டு வந்து இருந்த நிலவேம்பு கசாயத்தை ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு கொடுக்க முயன்றனர்.

    ஆனால், இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து நிலவேம்பு கசாயத்தை திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் நிலவேம்பு கசாயத்தை ஏழுமலை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து ஏழுமலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். #Swineflu #Dengue

    தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை 2 ஆயிரத்து 676 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்துள்ளது. #Swineflu #Dengue

    சென்னை:

    டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வகையான வைரஸ் மூலம் பரவுகின்ற நோயாகும்.

    தொடர்ச்சியாக வாந்தி எடுத்தல், வயிற்று வலி, தாகம், கடுமையான தலைவலி, கண்களின் கீழ் பகுதியில் வலி, எலும்பு மற்றும் தசைகளில் தாங்க முடியாத வலி, உடம்பில் தோன்றும் திடீர் கொப்புளங்கள் ஆகியவை டெங்கு காய்ச்சலின் மிக முக்கியமான அறிகுறிகளாகும்.

    டெங்கு காய்ச்சலை முதலிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளித்து விட்டால் குணப்படுத்தி விடலாம். அப்படி இல்லாமல் சாதாரண காய்ச்சலாக இருக்கும் என்று அசட்டையாக இருந்து விட்டால், டெங்கு நோய் அதிகமாகி குணப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும். அத்தகைய சூழ்நிலையில் உயிரிழக்கும் ஆபத்தும் ஏற்பட்டு விடுவதுண்டு.

    டெங்கு வைரஸ் தீவிரமாக பரவும் பட்சத்தில் வெள்ளை ரத்த அணுக்கள் கணிசமாக குறைந்து விடும். அத்தகைய அபாயம் உருவாகும் முன்பு டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

    டெங்கு காய்ச்சல் “ஏடிஎஸ் எகிப்தி” எனும் கொசு மூலம் பரவுகின்றன. இந்த கொசுக்கள் அதிகாலை மற்றும் பிற்பகலில் மனிதர் களைக் கடிக்கும். எனவே வீட்டின் சுற்றுப்புறத்தில் கொசு தேங்காமல் அல்லது உருவாகாமல் பராமரித்தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

    தமிழகத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தாக்கம் அதிகமாகி விடுகிறது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி இருப்பதே இதற்கு காரணமாகும்.

    தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை 2 ஆயிரத்து 676 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்துள்ளது. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. சென்னையிலும் கோவையிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

    சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் குழந்தைகள் சுகாதாரக் கழகம் ஆகிய 4 ஆஸ்பத்திரிகளிலும் தற்போது 70 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 4 மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களைத் தவிர தினமும் டெங்கு பாதிப்புக்காக நூற்றுக்கணக்கான நோயாளிகள் வெளிப்புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த வகையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் சுமார் 200 பேரும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 150 பேரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    பெரியவர்களை விட சிறுவர்கள்தான் டெங்கு பாதிப்புக்கு அதிகம் இலக்காகிறார்கள். தற்போது சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் 54 சிறுவர்-சிறுமியருக்கு டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    கோவையில் நேற்று சுமார் 400 பேர் காய்ச்சல் மற்றும் அறிகுறிகளுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்றனர். அவர்களில் சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் 134 பேர் நேற்று காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர். அவர்களிலும் பலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளிகள் பற்றி தான் தெரிய வந்துள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் டெங்கு பாதிப்புக்காக சிகிச்சை பெற்று சென்றவர்கள் எண்ணிக்கை விபரம் தெரிய வில்லை.

    தனியார் மருத்துவமனைகளில் தினமும் பல ஆயிரம் பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அவர்களையும் கணக்கிட்டால் தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை சில ஆயிரம் இருக்கும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு பரவுவதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்பட பல்வேறு வகை காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

    காய்ச்சல் வந்தால் 5 நாட்களுக்கு பிறகு மருத்துவ மனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

    கடந்த ஆண்டு 23 ஆயிரம் பேர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 2,700 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். சராசரியாக 1 நாளைக்கு 200 பேர் டெங்கு அறிகுறியுடன் வந்து சிகிச்சை பெற்று குணம் அடைந்து செல்கின்றனர்.

    காய்ச்சலை பொறுத்த வரை கடந்த மாதத்தை விட இந்த மாதம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

    அதனால்தான் மாவட்ட கலெக்டர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு தூய்மை பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Swineflu #Dengue

    ×