search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Darevils"

    டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvSRH
    ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 9 ரன்னிலும், ஜேசன் ராய் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் 43 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக ஹர்ஷல் பட்டேல் எதிர்முனையில் நிற்க ரிஷப் பந்த் வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

    15-வது ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி ரிஷப் பந்த் அரைசதம் அடித்தார். 36 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பந்த், அதன்பின் விஸ்வரூபம் எடுத்தார். ரிஷப் பந்த் அரைசதம் அடித்தபோது டெல்லி 14.1 ஓவரில் 104 ரன்கள் எடுத்திருந்தது.

    18-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் இரண்டு பவுண்டரி பறக்க விட்டார். இதனால் 18 ரன்கள் கிடைத்தது. அத்துடன் 97 ரன்கள் அடித்தார். 19-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை 56 பந்தில் பூர்த்தி செய்தார்.



    கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, 3 சிக்ஸ் விளாசி 26 ரன்கள் சேர்க்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ்.

    ஹர்சல் பட்டேல் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் 9 ரன்னிலும் ஆட்டமிழக்கா, ரிஷப் பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சரடன் 128 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    ×