என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Defence Acquisition Council"

    • இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்களை இயக்கி வருகிறது.
    • கடந்த ஆண்டு 26 கடற்படை ரக விமானங்களுக்கான ஆர்டரையும் இந்திய கடற்படை வழங்கியுள்ளது.

    பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.  செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவிற்கு வருகைதரவுள்ள நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

    தயார்நிலையில் உள்ள 18 விமானங்கள் தற்போது வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ள விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சிலின் ஒப்புதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இதற்கு இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டும். 

    இந்த விமானங்கள் வாங்குவதன்மூலம் இந்தியாவின் மொத்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 176-ஆக உயரும். இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு 26 கடற்படை ரக விமானங்களுக்கான ஆர்டரையும் இந்திய கடற்படை வழங்கியுள்ளது.  

    • இந்தியக் கடற்படைக்கு, அடுத்த தலைமுறைக்கான ஆயுதங்கள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
    • இந்த நடவடிக்கை வெளிநாட்டுச் செலவுகளை கணிசமாகக் குறைக்க உதவும்

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் ரூ.76,390 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இந்திய ராணுவத்திற்கான பல்வேறு வாகனங்கள், பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இது நாட்டின் பாதுகாப்பு தளவாட தயாரிப்பு தொழிலுக்கு ஊக்கமளிப்பதுடன், வெளிநாட்டுச் செலவுகளை கணிசமாகக் குறைக்கவும் உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மேலும் இந்தியக் கடற்படைக்கு, அடுத்த தலைமுறைக்கான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் ரூ.36,000 கோடி மதிப்பிலான பரிந்துரைகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    ×