என் மலர்
நீங்கள் தேடியது "ரஃபேல் போர் விமானங்கள்"
- இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்களை இயக்கி வருகிறது.
- கடந்த ஆண்டு 26 கடற்படை ரக விமானங்களுக்கான ஆர்டரையும் இந்திய கடற்படை வழங்கியுள்ளது.
பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவிற்கு வருகைதரவுள்ள நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தயார்நிலையில் உள்ள 18 விமானங்கள் தற்போது வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ள விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சிலின் ஒப்புதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இதற்கு இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த விமானங்கள் வாங்குவதன்மூலம் இந்தியாவின் மொத்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 176-ஆக உயரும். இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு 26 கடற்படை ரக விமானங்களுக்கான ஆர்டரையும் இந்திய கடற்படை வழங்கியுள்ளது.






