search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damaged building"

    • திண்டுக்கல் அருகே அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது
    • ஆபத்தான கட்டிடத்துக்கு குழந்தைகளை அனுப்பி விட்டு நாங்களும் நிம்மதியாக இருக்க முடியாது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி அருகே உள்ள செம்மனாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு காடையனூர், ஊரானூர், சீத்தப்பட்டி, மம்மானியூர், கருங்கல்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன் பிறகு எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பள்ளி கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது குறித்து பெற்றோர்கள் மாவட்ட கலெக்டருக்கும், கல்வித்துறை அலுவலகத்து க்கும் பல முறை புகார் மனு அனுப்பினர்.

    ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பள்ளி கட்டிடம் மேலும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டனர்.

    53 மாணவர்கள் படித்து வரும் இந்தப்பள்ளியில் இன்று அருகில் உள்ள 5 மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர் பாடங்களை நடத்தினர். இது குறித்து பெற்றோர்கள் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள சேதமடைந்த பள்ளிகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர்.

    அதன் பிறகு இந்த பள்ளிகள் சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அதன் பிறகு எந்தவித நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் கொண்டோம். எனவே அதிகாரிகள் பள்ளியை சீரமைக்கும் வரை அருகில் உள்ள கலையரங்கத்திலோ அல்லது வேறு இடத்திலோ பாடம் நடத்த ேவண்டும்.

    இல்லையெனில் ஆபத்தான கட்டிடத்துக்கு குழந்தைகளை அனுப்பி விட்டு நாங்களும் நிம்மதியாக இருக்க முடியாது என்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் உதவி தொடக்க கல்வி அதிகாரி பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    நயினார்கோவிலில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் போலீஸ்நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
    நயினார்கோவில்:

    பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வளர்ந்து நகரமான நயினார்கோவில் போலீஸ் நிலையம் மிகவும் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    போலீஸ்நிலைய கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதால், தற்போது இங்குள்ள கணினி அறையில் தான் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    ஒரே அறையில் போலீஸ் நிலையம் செயல்படுவதால், ஆவணங்கள் வைக்கவும், அதிகாரிகள் அமர்ந்து குற்றங்களை விசாரிக்கவும் முடியாமல் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் கைதிகளை விசாரிக்கவும், அடைத்து வைக்கவும் பாதுகாப்பான அறைகள் இல்லாமல் உள்ளது. 26 போலீசார் பணியாற்றும் இந்த போலீஸ் நிலையத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    எனவே இந்த போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×