search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corruption Perceptions Index"

    • உலகிலேயே ஊழல் மிகவும் குறைந்த நாடாக டென்மார்க் நாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
    • பின்லாந்து 2-ம் இடமும், 85 மதிப்பெண்ணுடன் நியூசிலாந்து 3-ம் இடமும் பிடித்துள்ளன.

    புதுடெல்லி:

    உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

    நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை விட 8 இடங்கள் பின்தங்கி 93-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 85-வது இடத்தில் இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.

    90 மதிப்பெண்ணுடன் டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடம் பிடித்துள்ளது. 87 மதிப்பெண்ணுடன் பின்லாந்து 2-ம் இடமும், 85 மதிப்பெண்ணுடன் நியூசிலாந்து 3-ம் இடமும் பிடித்துள்ளன.

    அண்டை நாடான பாகிஸ்தான் 133-வது இடமும், இலங்கை 115-வது இடமும், சீனா 76-வது இடமும் பிடித்துள்ளதுன.

    ×