search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "control production"

    • பழைய பொருள் வியாபாரிகள் 155 பேரை டெங்கு தடுப்பு நடவடிக்கையில் இணைத்துள்ளோம்
    • டெங்கு கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது.

    கோவை,

    டெங்கு கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்த பழைய பொருள் வியாபாரிகள் உதவியுடன் குடியிருப்புகளில் போட்டு வைத்துள்ள பழைய பொருட்களை சுகாதாரத்துறையினர் அகற்றி வருகின்றனர்.

    தமிழகத்தில் பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெங்கு நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது.

    கோவை மாவட்டத்திலும் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் பதிவாகிறது. கோவையில் தற்போது தினசரி 2 முதல் 3 பேர் வரை மட்டுமே டெங்கு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆனால் இதுவரை உயிரிழப்பு ஏதுவம் பதிவாகவில்லை.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பருவமழை தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு பெய்து வருவதால், டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கின்றன. குறிப்பாக வீடுகள், பொது இடங்களில் போட்டு வைத்துள்ள டயர், உடைந்த தொட்டிகள், பிளாஸ்டிக் பொருட்களி தேங்கி நிற்கும் தண்ணீரிலும், குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கி இருக்கும் மழைநீரிலும் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றன.

    ஊரக பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் சுகாதாரத்துறையினர் செல்லும்போது வீடுகளை சுற்றிலும் போட்டு வைத்துள்ள பழைய பொருட்களை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இதனால் ஊரக பகுதிகளில் வீடுகள், பொது இடங்களில் போட்டு வைத்துள்ள பழைய பொருட்களை பழைய பொருள் வியாபாரிகளின் உதவியுடன் அகற்றி வருகிறோம்.

    அதன்படி பழைய பொருள் வியாபாரிகள் 155 பேரை டெங்கு தடுப்பு நடவடிக்கையில் இணைத்துள்ளோம்.வீடுகள் மற்றும் பொது இடங்களில் போட்டு வைத்துள்ள பழைய பொருட்களை எடுத்து கொண்டு அதன் மதிப்புக்கு உண்டான புதிய பொருட்களையோ அல்லது பணமாகவோ உரிமையாளருக்கு வழங்குகின்றனர். இதன் மூலம் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கான வாய்ப்புகள் குறைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×