என் மலர்

  நீங்கள் தேடியது "conference office"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜூலை 31-ந்தேதி மக்கள் சங்கமம் மாநாடு மங்கலத்தில் நடைபெற உள்ளது.
  • இஸ்லாமிய கண்காட்சி- பேரணி, விளையாட்டு போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

  மங்கலம் :

  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு வருகிற ஜூலை 31-ந்தேதி மக்கள் சங்கமம் மாநாடு மங்கலத்தில் நடைபெற உள்ளது.

  மாநாட்டைத் தொடர்ந்து இஸ்லாமிய கண்காட்சி- பேரணி, சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக மாநாடு அலுவலகம் திறக்கப்பட்டது.

  மங்கலம் பாப்புலர் ப்ரண்ட் நகர தலைவர் அப்துல் கபூர் தலைமை தாங்கினார். மாநாட்டு அலுவலகத்தை மாவட்ட தலைவர் ஹபிபுர் ரஹ்மான் திறந்து வைத்தார்.மங்கலம் நகர செயலாளர் அப்துல் ரஜாக் வரவேற்று பேசினார்.

  பி.எப்.ஐ. மாவட்ட செயலாளர் முகமது ரபிக் முன்னிலை வகித்தார். எஸ்.டி.பி.ஐ. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு , துணை தலைவர் முஜிபுர் ரகுமான் , மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம் ,திருப்பூர் தெற்கு மாவட்ட எஸ்.டி.டி.யு. தலைவர் முஹம்மது பாரூக் ,எஸ்.டி.பி.ஐ. பல்லடம் சட்டமன்ற தொகுதி தலைவர் யாசர் அராபத் மற்றும் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ப்ரண்ட் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  ×