என் மலர்
நீங்கள் தேடியது "computer glitch"
- பத்திரங்கள் பதிவு செய்தவற்குள் கணினியில் ஏற்பட்ட தடைகளினால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை.
- இதனால் காலை முதல் மாலை வரை சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் கூட்டம் காணப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் சார் பதிவாளர் அலுவலகம் தாலுகா அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது. நேற்று முகூர்த்த தினம் என்பதால் 40 பத்திரங்கள் கிரயம் செய்ய பத்திரப்பதிவு செய்திருந்தார்கள்.
அதில் 4 பத்திரங்கள் மட்டும் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள பத்திரங்கள் பதிவு செய்தவற்குள் கணினியில் ஏற்பட்ட தடைகளினால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை.
இதனால் காலை முதல் மாலை வரை சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் கூட்டம் காணப்பட்டது. நேற்று நடைபெற இருந்த பத்திரப்பதிவுகள் அனைத்தும் இன்று நடைபெற உள்ளது கூறிப்பிடதக்கது.






