என் மலர்
நீங்கள் தேடியது "College girl runs with boyfriend"
- மாணவி கல்லூரிக்கு செல்லும்போது வாலிபர் ஒருவருடன் வழக்கம் ஏற்பட்டது.
- மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
கோவை,
கோவை ஆர்.எஸ் புரத்தை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாணவி கல்லூரிக்கு செல்லும்போது வாலிபர் ஒருவருடன் வழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்துவந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் மாணவி, காதலனுடன் சென்றது தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.






