search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Sameeran Review"

    • கோவையில் நாளை தொடங்குகிறது
    • நிகழ்ச்சியில் எம்.பி, எம்.எல்.ஏ.க்க ள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கோவை,

    கோவை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையிலான அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும்வகையில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

    அதன்படி, இந்த ஆண்டும் நாளை (11-ந் தேதி) சனிக்கிழமை அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.பி, எம்.எல்.ஏ.க்க ள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இப்பொருட்காட்சியில் செய்தி - மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்பட 27 அரசுத் துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செயல்படுத் தப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், அனைத்து அரசு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்கள் துறையால் மேற்கொ ள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களை காட்சி ப்படுத்தும் வகையிலும் சிறப்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இப்பணிகளை கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், பொழுதுபோக்கு அம்சத்துடன் தொடங்க ப்பட உள்ள அரசு பொரு ட்காட்சியில் பொது மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து க்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.

    ×