என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cock gambling arrested"

    • குந்துபையூர் தென்றல் நகரில் சிலர் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையில் போலீசார் வெள்ளி திருப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது குந்துபையூர் தென்றல் நகரில் சிலர் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடிக்க முயன்ற போது அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் சிக்கினர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் மயிலம்பாடி பகுதியை சேர்ந்த விஜயகுமார்(28), சித்தூர் பகுதியை சேர்ந்த மோகன் பிரசாத் (28), முருகன் (30) என தெரிய வந்தது. இவர்கள் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்கள் பயன்படுத்திய 3 சேவலையும் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்

    பவானி,

    பவானி கோவில்பாளையம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது சேலம் மாவட்டம் எடப்பாடி கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் (33) பவானி காடப்பநல்லூர் பெரமாச்சிபாளையம் கவுரி சங்கர் (30) சேலம் மாவட்டம் எடப்பாடி பூ மணியனூர் தீபன் (28) பவானி சித்தார் சங்கரன் தோட்டம் குருபிரசாத் (25) ஆகியோர் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.

    ×