சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்ததுநான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
Published on

பவானி,

பவானி கோவில்பாளையம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது சேலம் மாவட்டம் எடப்பாடி கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் (33) பவானி காடப்பநல்லூர் பெரமாச்சிபாளையம் கவுரி சங்கர் (30) சேலம் மாவட்டம் எடப்பாடி பூ மணியனூர் தீபன் (28) பவானி சித்தார் சங்கரன் தோட்டம் குருபிரசாத் (25) ஆகியோர் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com