என் மலர்
நீங்கள் தேடியது "CM Manohar parikar"
முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் நேற்று கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #ManoharParrikar
பனாஜி:
கோவா முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 3 மாதத்துக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்ட மனோகர் பாரிக்கர் கடந்த வாரம் இந்தியா திரும்பினார்.
இந்நிலையில், தற்போது கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, துணை சபாநாயகரும், பாஜக எம் எல் ஏவுமான மைக்கேல் லோபோ மருத்துவமனைக்கு சென்று மனோகர் பாரிக்கரை சந்தித்தார். அவர் நல்முடன் இருப்ப்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். #ManoharParrikar
கோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுகிறது என அப்பகுதி காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர். #ManoharParrikar
பனாஜி:
கோவா முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக, கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். மூன்று மாதங்களுக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இம்மாதம் 10-ம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா சென்று 17-ம் தேதி திரும்பினார்.
இதற்கிடையே, தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்
என கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுகிறது என அப்பகுதி காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக கோவா காங்கிரசை சேர்ந்த கிரிஷ் சோடோன்கர் கூறுகையில், கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும்.
முதல் மந்திரி முறையாக பணி செய்யாததால் நிர்வாகம் ஐசியுவில் உள்ளது. எனவே, முதல் மந்திரி அலுவலகம் கோவா மக்களுக்கு முதல் மந்திரியின் உடல் நிலை குறித்து உண்மையை விளக்க வேண்டும்.
கோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுவதால், மனோகர் பாரிக்கர் தகுந்த நபரிடம் தாது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
எனக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை விட மக்களின் பிரார்த்தனைகளால் தான் விரைவில் குணமாகினேன் என கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். #GoaCM #ManoharParrikar
பனாஜி:
கோவா முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மனோகர் பாரிக்கர். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, கோவா மற்றும் மும்பை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற அவர் கடந்த மாதம் சிகிச்சை முடிந்து திரும்பி வந்தார். ஆனாலும், உடல்நிலை காரணமாக எந்த நிகழ்ச்சியிலும் பாரிக்கர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், கோவாவில் நேற்று நடந்த பெண்கள் பேரணியில் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
உடல்நலக் குறைவால் நான் நோய் வாய்ப்பட்டிருந்த நேரம். எனது மன தைரியம் மற்றும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால் நான் குணமடைந்து விட்டேன்.
ஆனால், உண்மையான காரணம், எனது நலனில் அக்கறையுள்ள பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் உண்மையான பிரார்த்தனையே. அவர்களது பிரார்த்தனையால் தான் நான் விரைவில் குணமாகி உங்கள் முன் நிற்கிறேன். எனது நலனுக்காக பிரார்த்தனை செய்த இங்கு கூடியுள்ள பெண்கள் அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். #GoaCM #ManoharParrikar






