search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "treatment in america"

    கோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுகிறது என அப்பகுதி காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர். #ManoharParrikar
    பனாஜி:

    கோவா முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக, கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். மூன்று மாதங்களுக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இம்மாதம் 10-ம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா சென்று 17-ம் தேதி திரும்பினார்.

    இதற்கிடையே, தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்
    என கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுகிறது என அப்பகுதி காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர்.
    இதுதொடர்பாக கோவா காங்கிரசை சேர்ந்த கிரிஷ் சோடோன்கர் கூறுகையில், கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும்.

    முதல் மந்திரி முறையாக பணி செய்யாததால் நிர்வாகம் ஐசியுவில் உள்ளது. எனவே, முதல் மந்திரி அலுவலகம் கோவா மக்களுக்கு முதல் மந்திரியின் உடல் நிலை குறித்து உண்மையை விளக்க வேண்டும். 

    கோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுவதால், மனோகர் பாரிக்கர் தகுந்த நபரிடம் தாது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
    ×