search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chord Boycott"

    • பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
    • அதன்படி இன்று பவானியில் 100-க்கு மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    பவானி:

    பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வழக்கறி ஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் தாண்டவன், செயலாளர் கண்ணுசாமி, பொருளாளர் விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் கூட்டாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    பவானி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் மற்றும் பொருளாளருமான விஜயகுமார் 22-ம் தேதி காலை அவரது சொந்த ஊரான ரெட்டிபாளையம் பொது வழியில் வழிமறித்து வழக்கின் எதிர் தரப்பிரான ஒருவர் தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனையடுத்து வக்கீல் விஜயகுமார் வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலைய அதிகாரிகளின் அலட்சிய போக்கினை கண்டித்தும், வழக்கறிஞர்களின் தொழிலுக்கு எவ்வித பாதுகாப்பும், உத்தரவா தமும் இல்லாத நிலையை கண்டித்தும், நமது செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பா ளர்களின் கருத்தினை கேட்டு அதன் அடிப்ப டையில் இன்று ஒரு நாள் மட்டும் பவானி வழக்கறிஞர் சங்க வக்கீல்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பார்கள் என முடிவு செய்யப்பட்டு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    அதன்படி இன்று பவானியில் 100-க்கு மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    ×