search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child rights"

    ஜம்முவில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் மாரத்தானில் சுமார் 2000 குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர். #JKChildrenMarathon
    ஸ்ரீநகர்:

    ஜம்மு மாவட்டத்தில்  பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடத்தப்பட உள்ளது. ஜம்மு பல்கலைக்கழகத்தில் வரும் 24-ம் தேதி இந்த மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

    இது குறித்து ஜம்மு காஷ்மீரின்  இளைஞர் சேவை மற்றும் விளையாட்டுத் துறை கமிஷனர் சர்மத் ஹஃபீஸ் கூறியிருப்பதாவது:

    இந்த மாரத்தானில் எங்கள் குட்டி நட்சத்திரங்கள் பங்கேற்று, ஜம்மு பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் ஓடுவார்கள். குழந்தைகள் வளரும்போது சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், விளையாட்டுத் துறையில் பல்வேறு விளையாட்டுகளில் குழந்தைகள் பங்கு கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே இந்த மாரத்தானின் முக்கிய நோக்கம் ஆகும்.

    மேலும் இந்த மாரத்தானில், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் ஜம்மு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுமார் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #JKChildrenMarathon
    ×