search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess competation"

    • சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.
    • போட்டிகளை வரவேற்கும் வகையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சதுரங்கப் போட்டிகளை அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியா்களுக்கான சதுரங்க விதிகள் மற்றும் நுட்பங்கள் தொடா்பான ஒருநாள் புத்தாக்கப்பயிற்சி வகுப்பு ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் (பொறுப்பு) முருகேஸ்வரி வரவேற்புரையாற்றினா். இந்தப் பயிற்சி வகுப்புக்கு திருப்பூா் மாவட்ட கல்வி அலுவலா் கணேஷ் தலைமை வகித்து பேசியதாவது:-

    சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 27 ந் தேதி முதல் ஆகஸ்ட் 10 ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளை வரவேற்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சதுரங்கப் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 11, 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 4 பிரிவுகளில் தனித்தனியாகப் போட்டிகள் நடைபெறும். திருப்பூா் மாவட்ட பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் வரும் ஜூலை 13 ந் தேதி முதல் 15 ந் தேதி வரையிலும் வட்டார அளவிலான போட்டிகள் ஜூலை 20 ந்தேதியும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் ஜூலை 25 ந் தேதியும் நடைபெறும். இதில், மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடிக்கும் மாணவ, மாணவிகள் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைப் பாா்வையிட சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவாா் என்றாா்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால், திருப்பூா் கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×