என் மலர்

  நீங்கள் தேடியது "Centre median"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
  • 180 மீட்டருக்கு மையத்தடுப்புச்சுவர் வைக்கும் பணி தொடங்கியது.

  மங்கலம் :

  திருப்பூர் - மங்கலம் ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும். வளைவு, விபத்து ஏற்படக்கூடிய இடங்கள், நான்கு, மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் வாகனங்கள் விதிமீறி முந்தி செல்வதை தடுக்க மையத்தடுப்புச்சுவர் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.ஒரு மாதம் முன் நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.

  இந்நிலையில் 2021 - 22ம் ஆண்டு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, முதல்கட்டமாக 180 மீட்டருக்கு மையத்தடுப்புச்சுவர் வைக்கும் பணி தொடங்கியது. லாரிகளில் கொண்டு வந்த மையத்தடுப்புக்கற்களை கிரேன் உதவியுடன் நிறுவும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.

  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மங்கலம் - திருப்பூர் ரோட்டில் அதிக நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்ட பாரப்பாளையம், பெரியாண்டிபாளையம் சந்திப்பில் முதல்கட்டமாக மையத்தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் விதிமீறி முன்னேறி செல்லக்கூடாது.தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடதுபுறத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு மேலும் சில சந்திப்புகளில் மையத்தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்படும் என்றனர்.

  ×