search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Celebrating"

    • ஆலங்குடியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்
    • மேலும் பட்டாசு வெடித்து சாலையில் சென்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரின் பிரதான பகுதியான அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி சமூக ஆர்வலர்களும், பா.ஜ.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து மூடப்படும் கடைகளின் பட்டியலையும் வெளியிட்டது. இந்த பட்டியலில் ஆலங்குடி பழைய கோர்ட் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையும் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆலங்குடி அரசமரம் பகுதியில் உள்ள மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் முன்னதாக திரண்ட பா.ஜ.க. மற்றும் சமூக ஆர்வலர்கள் மூடியிருந்த டாஸ்மாக் கடையின் கதவிற்கு மாலை அணிவித்து, கடை மூடப்பட்டதாக வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு நோட்டீஸிற்கு மாலை அணிவித்ததனர். மேலும் பட்டாசு வெடித்து சாலையில் சென்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

    • கிள்ளிகுளம் மாநில தென்னை நாற்றுப் பண்ணையில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.
    • விவசாயிகளுக்கு தென்னை உர நிர்வாகம் பற்றிய செயல் விளக்கத்தினை வேளாண்மை அலுவலர் ராகுல் எடுத்துரைத்தார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் மாநில தென்னை நாற்றுப் பண்ணையில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தலைமை உரையாற்றினார்.

    தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குனர் (அட்மா) ஜெயசெல்வி இன்பராஜ் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் பழனி வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு தென்னையில் சிறப்புகள் கடைபிடித்தல் மற்றும் மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி பற்றிய தொழில்நுட்ப உரையை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் பிரேம லட்சுமி எடுத்துரைத்தார். மண்ணியல் துறை பேராசிரியர் தலைவர் டாக்டர் சுரேஷ் உரை மேலாண்மை குறித்தும், பூச்சிகள் துறை பேராசிரியர் டாக்டர் அப்துல் ரசாக் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    விவசாயிகளுக்கு கருத்து காட்சி மற்றும் தென்னை உர நிர்வாகம் பற்றிய செயல் விளக்கத்தினை தென்னை நாற்றுப் பண்ணை வேளாண்மை அலுவலர் ராகுல் எடுத்துரைத்தார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தென்னை நாற்றுப்பண்ணை வேளாண்மை அலுவலர் ராகுல், துணை வேளாண்மை அலுவலர் பரமசிவன், உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ் வெங்கடேஷ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்து சங்கரி ஆகியோர் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்னை சாகுபடி விவசாயிகள் மற்றும் உழவர் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    ×