என் மலர்
நீங்கள் தேடியது "CCTV videos"
தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. #SterliteProtest #ThoothukudiPoliceFiring
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.
இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த சிசிடிவி வீடியோ பதிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. #SterliteProtest #ThoothukudiPoliceFiring






